தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்த பிரதமருக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் அழகாபுரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 3 இடங்களில் பாஜக தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்த பிரதமருக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் எந்த கட்சியையும் பார்த்து பயப்பட தேவையில்லை என்றும் எல்லா இடங்களிலும் பாஜக சாதனைகளை கூறி வாக்குகளை சேகரியுங்கள் என தெரிவித்தார்.