அனைத்துக்கும் முன்னோடியாக எந்த மாநிலமும் செய்யாததை தமிழ்நாடு செய்துள்ளது!

சில தினங்களுக்கு முன்பு நம் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இல்லம் தேடி கல்வி திட்டம் 100 சதவீதம் மாநில அரசின் நிதியில் செயல்படுவதாக நேற்றையதினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.மு க ஸ்டாலின்

இல்லம் தேடி கல்வித் திட்டம் பற்றி மு க ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட கல்வி இழப்பு ஆய்வு செய்யப்பட்டது என்றும் கூறினார்.

கல்வியாளர்கள், யுனெஸ்கோ, தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழு வல்லுநர்கள் போன்றவர்களின் பரிந்துரையின்பேரில் தான் உருவாக்கப்பட்டது என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் கூறினார். மாணவர்களின் கற்றல் பாதிப்பை சரிசெய்ய எந்த மாநிலமும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக இல்லம் தேடி கல்வித் திட்டம் தமிழ்நாட்டில் வடிவமைக்கப் பட்டது என்றும் கூறினார்.

கல்வி கற்கும் தன்னார்வலர்கள் பல்வேறு அளவீடுகளின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறப்படுகிறது .இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து மாற்றுக் கருத்துக்களை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது என்றும் அரசின் வழிகாட்டுதல் கடைபிடிக்கும் தன்னார்வலர்கள் மட்டுமே தொடர அனுமதி என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாடு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். மாநில அளவிலான கல்விக் கொள்கையை விரைவில் கல்வியாளர் குழு அமைக்கப்படும் என்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கத்தை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment