எங்கு பார்த்தாலும் தேர்தல் களமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் மத்தியில் ஆங்காங்கே இடைத்தேர்தலும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன.
இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் மற்றொரு தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது. ஆனால் இந்த தேர்தல் அரசியலுக்கான தேர்தல் அல்ல. மாறாக இவை திரைத்துறைக்கான தேர்தலாக அமைந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் நடிகர் சங்க தலைவராக உள்ளார் நாசர். இந்த நிலையில் இயக்குனர் சங்கத்திற்கு ஜனவரி 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகிறது. இவரை எதிர்த்து யார் யாரெல்லாம் போட்டியிட உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்புகள் மத்தியில் திரை உலகினர் காத்துக் கொண்டுள்ளனர்.