தமிழக ஆளுநர் டெல்லி பயணம்: எதற்காக தெரியுமா?

தமிழக ஆளுநர் அதன் ரவி இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லி பயணம் மேற்கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய தினத்தில் துணைவேந்தர் நியமனம் குறித்து மசோதாவிற்கு விறகு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் துணைவேந்தர் களை மாநில அரசு நியமிக்கும் போது அரசு தலையிடும் என்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருடைய மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் டெல்லி பயணம் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அங்கு டெல்லியில் 4 அல்லது 5 நாட்கள் இருப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனிடையே தனிப்பட்ட முறையில் டெல்லி பயணம் மேற்கொண்ட போதிலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

அதே போல் துணைவேந்தர் நியமனம் குறித்த கடிதத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.