சைக்கிள் ஓட்டுங்க ஆரோக்கியத்தோடு வாழுங்கள்: அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கொடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் 8,480 மாணவர்களுக்கு 4கோடியே 20 லட்ச்சத்து 82 ஆயிரத்து 560 மிதிவண்டிகளும் 9,324 மாணவிகளுக்கு 4 கோடியே 82 லட்சத்து 51ஆயிரத்து 50 ரூபாய் மதிப்பிலான மிதிவண்டிகளும் என மொத்தம் 9 கோடியே 30 லட்சத்து 34 ஆயிரத்தி 120 ரூபாய் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை பிரகதாம்பாள் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் உள்ளிட்ட 213 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் கொடுக்கும் விழா மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.‌ இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆட்சி நிர்வாகத்தில் எந்த இடத்திலும் நெகிழி பயன்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தமிழ்நாடு முதலமைச்சர் எந்த ஒரு இடத்திலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கவனத்துடன் செயல்பட்டு வருகிறார், பள்ளிகளில் இருந்து மாணவர்களிடம் பிளாஸ்டிக் குறித்த கருத்துக்களை எடுத்து கூற வேண்டும்.

பள்ளிக்கு உரிய நேரத்தில் வருவதற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிதிவண்டிகள் பயணாக உள்ளது, தற்போது இலவசங்கள் குறித்து பல்வேறு கருத்துக்கள் வந்தாலும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா கூறியது போல் கோட்டையில் இருந்தாலும் குடிசை உள்ள ஏழை மக்களை பற்றிய யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினர்.

மேலும் ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்று கலைஞர் கருணாநிதி கூறினார். அதன் வழியில் தமிழக முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment