ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காத தமிழக அரசு: ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட தமிழக அரசு ஒதுக்கவில்லை என தமிழக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021-22 நிதி ஆண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி 33 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி சார்ந்த திட்டங் களுக்கு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு திட்டத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு கிடைத்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்விக்காக மொத்தம் உள்ள 33 திட்டங்களில் 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 1423 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்ட மூலம் தெரிய வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.