சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரின் பிரச்சனைகளை களைவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலமாக கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திட்டத்தின் மூலமாக பெண்கள் பயன் அடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு புதுமைப்பெண் திட்டத்தினை தொடர்ந்து மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.