
தமிழகம்
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழக அரசுதான் பொறுப்பு – சத்துணவு ஊழியர் சங்கம்!!
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயார் செய்யும் பொறுப்பு மகளிர் சுய உதவி குழு மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் தமிழக அரசு அளித்திருப்பது தவறான செயல் என சத்துணவு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்கு செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.
குறிப்பாக தமிழகம் முழுவதும் 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 குழந்தைகளுக்கு காலை உணவு வழக்கும் திட்டத்தை தமிழக முதல்கட்டமாக செயல்படுத்திட ரூ.33.55 லட்சம் கோடி நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காலையில் மகளிர் சுய உதவி குழு கொடுத்துவிட்டு, மதிய வேலைகளில் நாங்கள் கொடுக்கும் போது மாணவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இதனால் தமிழக முதல்வர் இதனை கருத்தில் கொண்டு சத்துணவு ஊழியர் சங்கத்திடம் காலை சிற்றுண்டி திட்டத்தினை கொடுக்க வேண்டு என வலியுறுத்தியுள்ளனர்.
