
தமிழகம்
புத்தக வாசிகளுக்கு ‘ஜாக்பாட்’… தமிழக அரசு அறிவிப்பு!!
சென்னையை போல அனைத்து மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிகள் பயன்பெறும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயனடைந்தனர். இதனிடையே மாவட்டம் முழுவம் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.4.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை 3 வகையாக பிரித்து அதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் புத்தக கண்காட்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தக கண்காட்சியை நடத்த கால அட்டவணை தயார் செய்வது, உரிய வழிமுறைகளைப் பின்பற்றுவது, நிதியை கையாளுதல் உள்ளிட்ட பணிகளை மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
