கவலையே வேண்டாம்; இனி ஸ்விகி,சொமேட்டோவில் தமிழ்நாடு புட்!

தற்போது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் வீட்டிலிருந்தே பலரும் ஆன்லைனில் புக் செய்கின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் முறை அதிகரித்துள்ளது.ஸ்விகி சொமேட்டோ

ஆனால் இதில் பெரும்பாலும் சைனீஸ், இங்கிலீஷ் உணவுகள் மட்டுமே கிடைக்கின்றன. தமிழகத்தில் குறிப்பாக ஸ்விகி,சொமேட்டோ போன்ற ஆன்லைன் செயலிகள் அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.

இந்த ஸ்விகி சொமேட்டோவில் இனி தமிழ்நாடு உணவுகள் கிடைக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார் அமைச்சர் மதிவேந்தன். ஸ்விகி, சொமேட்டோ மூலமாக சுற்றுலாத்துறை உணவகங்களில் உணவுகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதோடு சேர்த்து தமிழ்நாடு ஹோட்டல்களின் உணவுகளை இந்த ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் செயலிகளுடன் இணைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

300 சுற்றுலாத்தலங்களில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த திட்டம் தயாரிக்க உள்ளதாகவும் அமைச்சர் மதிவாணன் கூறினார். மெரினா அல்லது அதற்கு அருகே படகு சவாரி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் மதிவாணன் கூறினார்.

மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment