தமிழக பொறியியல் கவுன்சிலிங் – ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும்!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கு முதல் பொறியியல் படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் மே 5 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பித்து வருகின்றனர்.

மேலும் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

பொதுப்பிரிவின் கீழ் வரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 24 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இன்ஜினியரிங் சேர்க்கைக்கான பதிவு இன்று துவங்கியுள்ளதால், ஜூன் 12ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

மேலும் தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று DOTE தெரிவித்துள்ளது.

தமிழகத்தை விடாமல் துரத்தும் மழை – அடுத்த வாரமும் தொடர வாய்ப்பு!

இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org மற்றும் https://www.tndte.gov.in ஆகிய இரண்டு இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் இணையதள வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியாத மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் செயற்கை சேவை மையம் சென்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.