‘தமிழ்நாடு போதைப்பொருள் சந்தைகளம்’- இபிஎஸ் குற்றச்சாட்டு!!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். தினந்தோறும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக எதிர்கட்சி தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதே போல் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர் சென்றிருந்தார். அப்போது 2 திமுக கட்சி பிரமுகர்கள் பாலியல் தொல்லை கொடுத்திருந்தனர். இதனையடுத்து பெண் காவல் கண்ணீர் மல்க காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றபோது முக்கிய பிரமுகர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சூழலில் 2 நாட்கள் கழித்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தாகவும், இது பற்றி பேச சட்டசபையில் மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழ்நாடு போதைப்பொருள் சந்தை களமாக மாறியுள்ளது. கடல்வழியாக போதை பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் திட்டமிட்டு எங்களுடைய பேச்சு மறுக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.