Connect with us

நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை! தொடங்கியது அனைத்துக் கட்சி கூட்டம்!!

NEET 60cb23cd007e3

News

நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை! தொடங்கியது அனைத்துக் கட்சி கூட்டம்!!

நுழைவுத்தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை! தொடங்கியது அனைத்துக் கட்சி கூட்டம்!!

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் பங்கேற்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டம் ஆனது நீட் விலக்கு மசோதா தொடர்பாக கூடியுள்ளது.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் விலக்கு மசோதா தொடர்பாக விவாதம் செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம் தமிழ்நாடு என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

2006 ஆம் ஆண்டு டாக்டர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லும் என்று 2006 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நுழைவு தேர்வை ஒழிக்கும் சட்டத்துக்கு 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி இருந்தார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து வந்தோம் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம் என்றும் கூறினார்.

ஆளுநரை நேரில் சந்தித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தினேன் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top