கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட வன்முறை குறித்து தமிழக டிஜிபி நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து கிடந்தார். இந்நிலையில் தன்னுடைய மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆறாவது நாளில் இறந்து போன மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். குறிப்பாக இன்று காலை முதல் மதியம் வரையில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.
இந்த சூழலில் போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்த பட்டதாக கூறப்படுகிறது. எனவே நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர்.
தற்போது தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வன்முறை நடைப்பெற்ற இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதோடு போராட்டக்காரர்கள் இந்த ஊரை சேர்ந்தவர்களா அல்லது வெளியூரைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.