Connect with us

டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்

republic day function

News

டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் இடம்பெறும்! தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும்: முதல்வர் ஸ்டாலின்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா வாகன ஊர்தியில் தமிழகத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்பிக்கள் பலரும் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு அதனை நிராகரித்தது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

குடியரசுதினவிழா அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும் மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு இந்த ஆண்டு இந்தியா 75 என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் இடம் பெற வேண்டி விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு பெறுகின்ற வகையில் அலங்கார ஊர்திகளை வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வு குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களை செய்தோம் என்றும் நான்காவது கூட்டத்திற்கு எந்த ஒரு காரணம் என்று அழைக்காமல் அதுகுறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு தற்போது நிராகரிக்கப் பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன் என்று கூறினார்.

stalin re

கிடைக்கப்பெற்ற மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சரின் கடிதத்தில் எவ்வித காரணங்களும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

stalin republic

இதனால் தமிழ்நாடு சார்பில் நடைபெறவுள்ள குடியரசு தின அலங்கார ஊர்தி நிகழ்ச்சியில் கண்டிப்பாக மத்திய அரசால் நிராகரிக்கப் பட்ட தமிழ்நாட்டு வாகனம் பங்கேற்கும் என்று கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top