தமிழகத்தில் எஸ்.பி வேலுமணி வழக்குகள் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் எஸ்.பி வேலுமணி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனது பெயரில் இருக்கும் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இதற்கு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது எஸ்.பி வேலுமணி ஆஜரான வழக்கறிஞர் நீதிபதியை அவமதிக்கும் விதமாக எஸ்.பி வேலுமணி வழக்குகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வாதிட, காவல் துறையினர் அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.
அதே சமயம் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் எந்த ஒரு நீதிபதி மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை என்றும் இரண்டு வெவ்வேறு வழக்குகள் இருக்கும் சமயத்தில் எந்த அடிப்படையில் தலைமை நீதிபதி தன்னுடைய அமர்விற்கு மாற்றிக் கொண்டார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதோடு அவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு அவசரம் என்ன? என்று கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.