தமிழ்நாடு: இரு மடங்கு வேகத்தில் வீசும் கொரோனா அலை; ஒரே நாளில் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

டிசம்பர் மாதம் தொடங்கியவுடன் கன மழையின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்தது. அதேசமயத்தில் கரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கொரோனாவினால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் இருமடங்காக உயர்ந்து கொண்டே வருகிறது.

கொரோனா

இன்று  தமிழ்நாட்டில் மேலும் 4862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதனால் இன்று ஒரே நாளில் 2000 ஆக கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் நேற்றையதினம் கொரோனா பாதிப்பை விட இன்று ஒரே நாளில் கூடுதலாக 2000 பேருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 449 ஆக காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள் ,வீடுகள், கண்காணிப்பு மையங்களில் 16 ஆயிரத்து 577 பேர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 117611 பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இதுவரை 27 லட்சத்து 7 ஆயிரத்து 58 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment