Connect with us

“ஏற்றுமதியில் ஏற்றம்; முன்னணியில் தமிழ்நாடு” மாநாடு!

News

“ஏற்றுமதியில் ஏற்றம்; முன்னணியில் தமிழ்நாடு” மாநாடு!

002655908c2d5008ab6338c36cafd64e

தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். மேலும் அவர் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது “ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு” என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின். மேலும் 2130 கோடி மதிப்பீட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் மாநாட்டில் அவர் கூறினார். மேலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 41 ஆயிரத்து 695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கையை வெளியிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் தூத்துக்குடி சர்வதேச அறைகலன்கள்  தயாரிப்பு பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கையோடும் வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொடங்கப்படும் தொழிற்சாலைகளில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார். சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் செய்யப்பட்ட உள்ளன என்றும் கூறினார். சேலம் திருச்சி மதுரை தஞ்சை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். ஏற்றுமதியாளர்களுக்கு, முதலீட்டாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒரு மாநிலத்திற்கான வளர்ச்சியாக  மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும்  இருந்துள்ளது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டின் வளர்ச்சி உலகம் முழுமைக்கும் பரந்த வளர்ச்சியாக இருந்துள்ளது என்றும் கூறினார். உலகங்களும், வணிகர்களும் ஒன்று கூடும் இடமாக தமிழ் மாநிலம் அமைந்திருக்கிறது என்றும் கூறினார்.cdc5d0d423d2e18a10fd3e06498d518a

தமிழ்நாட்டின் தயாரிப்புகள் அனைத்தும் உலகம் முழுமையும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். உலகின் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் நிறுவனத்தை தொடங்கி விட வேண்டும் என்றும் அவர் கூறினார். நாம் உலகம் முழுவதும் செல்ல வேண்டும், உலகம் தமிழ்நாட்டை நோக்கி வந்தாக வேண்டும் என்று முறையில் அவர் கூறினார். 1.93 லட்சம் கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்து இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்குகிறது நம் தமிழகம்.

அகில இந்திய அளவில் தமிழ் நாட்டின் ஏற்றுமதி அளவானது 8.97 சதவீதமாக உள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் வகித்து வருகிறது ஆடை அணிகலன்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாட்டின் பங்களிப்பானது 50% ஆக காணப்படுகிறது, இந்தியாவின் காலனி ஏற்றுமதியில் 45சதவீத பங்களிப்பை நம் தமிழகம் அளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்,d4c160f6481b127e8a34d25f0db499da

மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பானது 25 சதவீதமாக காணப்படுகிறது என்றும் கூறினார். தமிழ்நாட்டின் வெற்றி ஒவ்வொரு தமிழனின் உழைப்பை உள்ளடக்கி வெற்றி ஆகும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டின் பங்களிப்பு விழுக்காடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.40fcf904cad9dcee0158ec99d6ae2374

வேலூர் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து தோல் பொருள்கள், கோவை, திருப்பூரில் இருந்து ஜவுளி போன்றவைகளை ஏற்றுமதி ஆகின்றன என்றும் அவர் கூறினார். சென்னையில் மோட்டார் வாகன பொருட்கள் ஏற்றுமதியாகின்றன என்றும் அவர் கூறினார். மின்சக்தி எரிசக்தி மின்னணுவியல் துறைகளில் உயர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காஞ்சிபுரம், ஆரணி பட்டு சேலைகள், சின்னாளபட்டி சுங்குடி சேலைகள், கோவை கிரைண்டர்கள், மதுரை மல்லி, தஞ்சை ஓவியங்கள், பத்தமடைப் பாய்கள், மாமல்லபுரம் சிற்பங்கள், திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம் என்று புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டு பொருட்கள் ஏராளம் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டின் பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிக அதிக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது என்றும் புறப்பட்டார். ஏற்றுமதி செய்வதற்குள்ள இடர்பாடுகளை களைய உரிய அனுமதி பெற்று தர ஏற்றுமதி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் உரையில் அவர் கூறினார். ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு விடக்கூடிய 6,000 ஏக்கரில் மா நல்லூரில் ஏற்றுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். பொருட்களுடன் 5,000 ஏக்கரில் தூத்துக்குடியிலும் ஏற்றுமதி வளாகங்கள் அமைக்கப்படும் என்றும் மாநாட்டில் அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top