
தமிழகம்
தமிழக முதல்வர் அடுத்த வாரம் டெல்லி பயணம்: எதற்காக தெரியுமா?
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்மாத இறுதியில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் சென்று அழைப்பு விடுக்க டெல்லி செல்ல இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதால் பிரதமருக்கு அழைப்பு விடுக்கலாம் என முன்னதாக செய்தி வெளியாகி இருந்தது. தற்போது அடுத்த வாரம் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த திங்கட்கிழமை சென்னை மாமல்லபுரத்திற்கு சென்று தமிழக முதல்வர் ஆய்வு நடத்தினார். கிட்டத்தட்ட 80% பணிகள் நிறைவுப்பெற்று இருப்பதாக, இதற்காக 23–குழுக்களை தமிழக அரசு அமைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
