போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் அனைத்து எம்.எல்.ஏ-களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
போதைப் பொருளை ஒழிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு வருகின்ற 10-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
அதோடு மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் இவற்றை தடுக்கும் விதத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். வளர்ந்து வரும் இளைஞர்களின் சமுதாயத்தை பாதிக்கும் வகையில் இருக்கும் போதைப்பொருளை ஒழிக்கும் விதமாக இந்த கடிதம் என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், அன்றைய தினத்தில் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினத்தில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.