பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்: எதற்காக தெரியுமா?

உக்ரைன் -ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் சுமார் 2000 மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் மருத்துவப் படிப்பை தொடர்வதற்கு அனுமதி இல்லை என சில தினங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி, மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த வகையில் இந்தியா திரும்பிய மாணவர்களின் மருத்துவ படிப்பைத் தொடர அனுமதிக்குமாறு பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மோடி எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment