Connect with us

புதுமைப்பெண் திட்டம்: தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!!

stalin new16

பொழுதுபோக்கு

புதுமைப்பெண் திட்டம்: தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!!

தமிழகத்தின் நடப்பாண்டு பட்ஜெட்டில் புதுமைப்பெண் கல்வி திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்தகைய திட்டத்தினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதே போல் தமிழக அரசின் 3 புதிய திட்டங்களின் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வருகை தந்துள்ளார்.

குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் அவருக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரன், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், ஆசிரியர் தினமான இன்றைய தினத்தில் 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆகிய 3 திட்டங்களையும் தமிழக முதல்வர் இன்று தொடக்கி வைப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top