Connect with us

அதிர்ச்சி..! தமிழக முதல்வருக்கு உடல் நலக்குறைவு;

stalin cm

Tamil Nadu

அதிர்ச்சி..! தமிழக முதல்வருக்கு உடல் நலக்குறைவு;

தமிழக முதலமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சராக இருப்பவர் மு.க.ஸ்டாலின். இவருக்கு திடீரென சிறிய காய்ச்சல், ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் கலந்து கொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top