
தமிழகம்
வெள்ளத் தடுப்புப் பணிகள்: செங்கல்பட்டில் தமிழக முதல்வர் ஆய்வு!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனை தடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.75 கோடி மதிப்பிட்டில் வெள்ள தடுப்பு பணிகளை தமிழக முதல்வர் என்று பார்வையிடுவதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் நகர்புறங்களில் வாழும் வீடுகள் நிறைய இருப்பதால் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக இரண்டு வாரங்களாக நீர் தேங்கிய தாக கூறப்படுகிறது.
குறிப்பாக நுங்கம்பாளையம் மேம்பாலம், அரசன்கழனி ஏரி மற்றும் மதுரப்பாக்கம் ஓடை ஆகிய இடங்களில் தமிழக முதல்வர் சமீபத்தில் ஆய்வு நடத்தினார். தற்போது நடைபெறும் பணிகளை பொருத்தவரையில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும் என கூறினார். இந்த ஆய்வின் போது அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, சு. முத்துசாமி மற்றும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
