செங்கல்பட்டு: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணம்!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து வேகமாக மோதியதில் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கீழ்ப்பாக்கம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் மதுராந்தகம் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதே போல், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவியாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment