Connect with us

விருதுநகர் வெடி விபத்து: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!!

stalin cm

தமிழகம்

விருதுநகர் வெடி விபத்து: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த கீழான்மறைநாடு என்ற கிராமத்தில் முத்துமீனா என்ற பட்டாசு ஆலை அரசு அனுமதியுடன் 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் சுமார் வேலைபார்த்து வந்த நிலையில் வெடி மருந்தில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஜெயராமன் என்பவர் பட்டாசு வெடித்து கருகிய நிலையில் உயிரிழந்ததார்.

இந்த சூழலில் தமிழக முதல்வர் விபத்தில் உயிரிழந்தவருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் படி, கீழாண்மறைநாடில் உள்ள பட்டாசு ஆலை தீ விபத்தில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாக கூறியுள்ளார்.

அதோடு வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், படுகாயம் அடைந்த பவானீஸ்வரனுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top