இந்தியாவில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் வரிவருவாய் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நீதித்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கும் சூழலில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அதே போல் செஸ் ஒலிம்பியான் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதால் இதற்காகவும் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.