இன்று இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் கூட உள்ள நிலையில், மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை 11:00 மணிக்கு, அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம், வரும் 9ம் தேதி துவங்குகிறது. அன்று காலை 10:00 மணிக்கு, ஆளுநர் ரவி உரையாற்றுகிறார். அதற்காக தயார் செய்யப்பட்டுள்ள உரைக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளிக்க ஆளுநர் உரையில் ஓரிரு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் உதயநிதி முதன்முறையாக பங்கேற்க உள்ளார்.
பெண்களுக்கு மாத உரிமைத் தொகை வழங்குவது உட்பட, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட தகவல் வெளியாகி உள்ளது.