தமிழகம் முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டிகள்: பாஜக திடீர் உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளைக்குள் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக மேல் இடம் உத்தரவிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜகவில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அனைத்து தொகுதிகளிலும் பூத் அளவில் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளைக்குள் தமிழக முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. பூத் கமிட்டியை அமைத்ததும் 30 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என பிரதிநிதிகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பூத்தில் உள்ள வாக்காளர்கள் பட்டியலை தயாரித்து அவர்களே வாக்காளர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பூத் அளவில் வாட்ஸ் அப் குழுக்களை ஏற்படுத்தி மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கொண்டு போய் சேரும் வகையில் பணிகள் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.