நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்-தமிழக அதிகாரிகள் தொடர்ந்து செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம்!
என்னதான் ஒவ்வொரு மாநில அரசும் மத்திய அரசும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதனை தடை செய்வதற்கு முழு அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
இந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலை தொடர்ந்து செய்யாதீர்கள் என்று தமிழக அரசு அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை கண்டித்துள்ளனர்.
முன்னாள் தலைமைச் செயலர்-டிஎன்பிஎஸ்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 9 பேர் மன்னிப்பு கேட்ட நிலையில் அறிவுறுத்தியுள்ளது. மன்னிப்பு கேட்டதால் ஒன்பது அதிகாரிகளின் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மார்க் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காததால் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, 9 அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
