தினமும் 12 மணி நேர வேலை.. என்ன சொல்கிறது மசோதா?

தமிழக சட்டமன்றத்தில் இன்று தினமும் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இந்த மசோதா என்ன சொல்கிறது என்பதை தற்போது பார்ப்போம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் 1948 ஆம் ஆண்டின் தொழிற்சாலைகள் சட்டம் 8 மணி நேரம் சம்பளம், வாராந்திர விடுமுறை உள்ளிட்ட நடைமுறையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் அதே நேரத்தில் 12 மணி நேரம் வேலை பார்க்க தொழிலாளர்கள் விரும்பினால் அவர்கள் நான்கு நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதமுள்ள மூன்று நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் இந்த மசோதா கூறுகிறது

வாரத்திற்கு 48 மணி நேரம் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் தினமும் எட்டு மணி நேரம் என ஆறு நாட்கள் வேலை பார்ப்பதற்கு பதிலாக தினமும் 12 மணி நேரம் நான்கு நாட்கள் வேலை பார்க்கலாம் என்றும் ஆனால் அதே நேரத்தை தொழிலாளர்கள் விரும்பப்பட்டா; தான் இந்த சட்டம் அங்கு நடைமுறைகள் இருக்கும் என்றும் வாரத்துக்கு நான்கு நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று தொழிலாளர்களை நிறுவனத்தின் உரிமையாளர்கள் வற்புறுத்த கூடாது என்றும் இந்த சட்டம் சொல்கிறது.

ஆனால் அதே நேரத்தில் எல்லா துறைக்கும் இந்த மசோதா பொருந்தாது என்றும் மின்னணு துறை, தோல் அல்லாத காலனி உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள், மென்பொருள் துறை ஆகிய நிறுவனங்கள் சூழலுக்கு ஏற்ப அவர்களாகவே விரும்பி 12 மணி நேரம் வேலை செய்ய முன்வந்தால் இந்த சட்டம் அவர்களுக்கு உதவும் என்று இந்த மசோதா தெரிவித்துள்ளது.

நான்கு நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு மற்ற நாட்கள் ஓய்வு எடுக்கலாம் அல்லது சொந்த பணியை செய்யலாம் என்று விருப்பமுள்ள தொழிலாளர்கள் மட்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த மசோதா தெரிவித்துள்ளது.

மேலும் தினமும் 12 மணி நேரம் நான்கு நாட்கள் வேலை செய்துவிட்டு ஐந்தாவது நாள் தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்கு தனியாக சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் சட்டத்தில் இடம் உள்ளது என்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை என்றும் விருப்பக்கூடிய நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மட்டும் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டு நடைபெற படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.