பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி: கலைக்கல்லூரி விண்ணப்ப தேதி அறிவிப்பு..!

பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கலை கல்லூரியில் சேர இருக்கும் நிலையில் கலை கல்லூரியில் விண்ணப்பம் தரும் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லட்சக்கணக்கான மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ள நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே 8ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளி வருவதால் மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

college1

இந்த நிலையில் பிளஸ் டூ முடித்தவுடன் கலைக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கலை கல்லூரியில் சேர விண்ணப்பம் தரும் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியார் கலை கல்லூரிகளில் மே ஒன்றாம் தேதி முதல் இளநிலை முதல் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு இணையாக கலைக்கல்லூரிகளிலும் மாணவர்கள் அதிகம் சேர்ந்து வருகின்றனர் என்பதும் கலை கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கான அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டும் கலைக்கல்லூரிகளில் அதிக மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் டூ தேர்வு வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்பே கலைக்கல்லூரி தனியார் கலை கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரிகளில் முன்கூட்டியே விண்ணப்பங்கள் பெற்று கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews