Connect with us

தமிழகத்தை 2 ஆக பிரியுங்க!!- நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி;;

nainar nagendran

தமிழகம்

தமிழகத்தை 2 ஆக பிரியுங்க!!- நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி;;

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வருவதால் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியினரிடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அரசை எதிர்த்து பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன் திமுக அமைச்சர் ஆர்.ராசா அண்மையில் நாட்டை இரண்டாக பிரிப்போம் என்று கூறியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக வட தமிழகம் தென் தமிழகம் என்று பிரிப்பதால் இரண்டு முதலமைச்சர்கள் இருப்பார்கள் என கூறினார்.

அதோடு இவ்வாறு பிரிக்கும் பட்சத்தில் இரண்டு இடத்திலும் பாஜக தனது ஆட்சியை நிலைநிறுத்தும் என்று கூறினார்.  பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் தருணம் ஏற்படும் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் இடத்தில் பாஜக இருப்பதாக அவர் கூறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top