News
திடீரென பேருந்தில் பயணம் செய்த தமிழிசை: புதுவை மக்கள் ஆச்சரியம்!
ஒரு மாநிலத்தின் கவர்னர் என்றாலே அவர் செல்லும் காரின் முன் பக்கமும் பின் பக்கமும் கார்கள் அணிவகுத்து செல்லும் என்பதும் போக்குவரத்துக்கள் நிறுத்தப்படும் என்பதும் தெரிந்ததே
ஆனால் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் திடீரென மாநகரப் பேருந்தில் ஏறி பயணம் செய்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என்ற வகையில் என்று புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நகரப் பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது அவர் பயணிகளிடம் குறைகளை கேட்டார். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்து பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பேருந்தில் பயணம் செய்த புகைப்படங்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
புதுவை மாநகர பேருந்துகளின் தரம் மற்றும் சாலை தரம் எப்படி உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக பேருந்தில் சென்றதாகவும் விரைவில் பேருந்துகள் நவீனமயம்மாக்கப்படும் என்றும் சாலைகள் உயர்தரமாக மாற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
