தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பல திரையுலக பிரபலங்கள் பலியாகி வருவது திரையுலகினர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் திரையுலகின் மூத்த கலைஞர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் ’தொரட்டி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஷமன் மித்ரு என்பவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஏழு முப்பது மணிக்கு அவர் காலமானார். நடிகர் ஷமன் மித்ரு மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் ஷமன் ‘தொரட்டி’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமன்றி இயக்குநர் கேவி ஆனந்த் அவர்களிடமும் உதவி ஒளிப்பதிவாளராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குருநாதர் கேவி ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு பலியானதால் மிகுந்த வருத்தத்துடன் இருந்த ஷமன், தற்போது அவரே பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.