தமிழ் இயக்குனர்கள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்… துக்கத்துடன் பேசிய வைரமுத்து…

வைரமுத்து புகழ்பெற்ற கவிஞர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். தமிழ் மொழியின் மீது அதீத பற்றினைக் கொண்டவர். நிகழ்ச்சிகளிலும் மேடையிலும் பேசும் போது ஆங்கிலம் கலக்காமல் சுத்தத் தமிழில் இன்றளவும் பேசுபவர் வைரமுத்து அவர்கள் தான்.

தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பிறந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு ‘நிழல்கள்’ திரைப்படத்தில் ‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

முதல் பாடலே வைரமுத்து அவர்களுக்கு ஹிட் பாடலாக அமைந்தது. அந்தப் பாடல் இன்றளவும் மக்களால் ரசிக்கப்படுகிறது. அப்படி ஒரு அருமையான பாடல். தமிழில் கிட்டத்தட்ட 6000 பாடல்களை எழுதியுள்ளார. சிறந்த பாடலாசியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். மேலும் ‘கலைமாமணி’, பத்மஸ்ரீ’ ஆகிய விருதுகளையும் தன்னகத்தே கொண்டவர்.

இசைஞானி இளையராஜா அவர்களுடனும் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உடனும் இணைந்து இவர் எழுதிய பாடல்கள் பேரும், புகழும், விருதுகளையும் வென்றன. வைரமுத்து வரிகளுடன் இளையராஜா இசையில் வரும் பாடல்கள் கேட்பவருக்கு விருந்தாக அமையும்.

பாடல்கள் மட்டுமல்லாது வைரமுத்து அவர்கள் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள், புதினங்கள், நாவல்கள், புத்தகங்கள் என பல படைப்புக்களை உருவாக்கியுள்ளார். இவர் எழுதிய ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘மூன்றாம் உலகப் போர்’ போன்றவைகள் அனந்த விகடனில் தொடராக வெளிவந்து பிரபலமானவை ஆகும்.

இந்நிலையில், தற்போது விஜயின் ‘கோட்’, அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்தப் படங்களின் பெயர்களை பற்றி வருத்தத்துடன் பேசியுள்ளார் வைரமுத்து. அவர் கூறியது என்னவென்றால், இந்த படங்களின் பெயர்களை கண்டு நான் துக்கப்படுகிறேன், வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். ஏன் இப்படி படத்தின் பெயர்களை ஆங்கிலத்தில் வைக்க வேண்டும், தமிழில் சொற்களுக்கா பஞ்சம். இனி தமிழ் இயக்குனர்கள் இதைக் கருத்தில் கொண்டு தாங்கள் எடுக்கும் படங்களுக்கு தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று வருத்தப்பட்டு பேசியுள்ளார் தமிழின் மீது அதீதப் பற்றுக் கொண்ட கவிஞர் வைரமுத்து.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...