சொல்வேந்தர் எனப் போற்றப்படும் சுகி.சிவம்… இந்தப் பெயர் உருவான சுவாரஸ்ய வரலாறு..

வாழ்க்கைத் தத்துவங்களையும், எதார்த்தங்களையும், இந்து மதக் கோட்பாடுகளையும், பல ஆன்மீகக் கருத்துக்களையும் எளிய மக்களும் உணரும் வகையில் தன்னுடைய ஆழமான கருத்துக்களால் செவிகளுக்கு விருந்தளித்து வருபவர் தான் சுகி. சிவம். சன் டிவியில் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சி இவரை உலகமே அறியச் செய்தது. சொல்வேந்தர் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படும் சுகி சிவம் பட்டிமன்றப் பேச்சாளராகவும், ஆன்மீக உரையாற்றுபவராகவும், சொற்பொழிவாளராகவும் விளங்கி வருகிறார்.

இவருடைய தந்தை சுகி. சுப்ரமணியம் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவரும் பேச்சாளரே. அப்போது கல்கி சதாசிவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சுகி சிவத்தின் இயற்பெயர் ஆறுமுகம். அவர் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிந்த சமயத்தில் அவர் தந்தை பணியாற்றிக் கொண்டிருந்த திருச்சி வானொலி நிலைய அலுவலருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே கல்கி சதாசிவத்திடம் இதுகுறித்துத் தெரிவிக்க அப்போது உடனே அவர் டெல்லி தலைமை வானொலி நிலைய அலுவலத்தில் கூறி சுகி. சுப்ரமணியத்திற்கு சென்னைக்குப் பணியிடமாறுதல் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவ்வை சண்முகி படத்துல ஜெமினிக்குப் பதில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் திலகம்.. சிவாஜியே ஜெமினிக்குப் பரிந்துரை செய்த வரலாறு..

அந்த நன்றிக்காக தனது மகன் ஆறுமுகம் பெயரை சதாசிவம் என்று மாற்றுகிறார். இந்தப் பெயரை அவர் சதா சிவம் என்று எழுதத் தெரியாமல் நிறைய நேரங்களில் சாத சிவம் என்றுதான் எழுதுவாராம். இதனையடுத்து ஆறுமுகம் என்ற சதாசிவம் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவருடைய தமிழாசிரியர் உன் தந்தை பெயர் சுப்ரமணியம் சிவம் தானே. எனவே உனது பெயரில் சுகி என்பதைச் சேர்த்து சுகி.சிவம் என்று வைத்துக் கொள். அழைப்பதற்கும் நன்றாக உள்ளது என்று கூற, பின்னர் அதனையே தனது பத்தாம் வகுப்பு சான்றிதழில் பதிவு செய்துள்ளார்.

பின் அந்தப் பெயரே நிலைத்துள்ளது. இளம்வயதில் பருமனாகவும், கருப்பாகவும் இருந்த சுகி சிவம் தாழ்வு மனப்பான்மையால் அவதிப்பட, பின்னர் அதனை மாற்றி பல்வேறு பேச்சுப் போட்டிகளில் பங்குபெற்று தன்னுடைய திறமையை வளர்த்து இன்று உலகம் போற்றும் சொற்பொழிவாளராகத் திகழ்கிறார். மேலும் பல நூல்களையும், ஆன்மீக ஒலி நாடாக்களையும் தனது சொந்த பதிப்பகம் மூலம்வெளியிட்டிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...