2 இலட்சம் செலவு 30 லட்சம் கலெக்ஷன்.. அந்தக் காலத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.. ஏவிஎம்-ன் முதல் மெகா ஹிட் திரைப்படம் இதான்

இன்று 100 கோடி கிளப்,1000 கோடி கிளப், பாக்ஸ் ஆபிஸ் என்று ஹிட் படங்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில் அந்தக் காலத்திலேயே முதன் முதலாக ஏ.வி.எம் தயாரித்த ஒரு படம் 30 லட்சம் வரை வசூல் செய்து இமாலாய சாதனை படைத்துள்ளது என்றால் வியப்பாக உள்ளதா..?

ஏவிஎம் ஸ்டுடியோ இந்திய சினிமாவின் பல்கலைக்கழகம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். காரைக்குடியில் தொடங்கிய இவர்களது சினிமா பயணம் இன்று 80 ஆண்டுகளைக் கடந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வீற்றிருக்கிறது.

தற்போது சீரியல்கள், சின்ன பட்ஜெட் படங்கள், ஒடிடி படங்களில் கவனம் செலுத்தி வரும் ஏவிஎம் நிறுவனம் ஆரம்ப காலகட்டத்தில் மற்ற ஸ்டுடியோக்களுடன் இணைந்து திரைப்படங்களைத் தயாரித்தது. ஏவிஎம் நிறுவனம் மற்றும் பிரகதி ஸ்டுடியோ ஆகியவை இணைந்து தயாரித்த ஸ்ரீ வள்ளி திரைப்படம் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்தப் படம் அப்போதைய மதிப்பில் ரூ.2 லட்சத்தில் எடுக்கப்பட்டது.

சத்யராஜுக்கு நடிகனாக விதை போட்ட விஜயக்குமார் படம்.. பதிலுக்கு தாய்மாமனாக நின்ற தருணம்

இதில் ஹீரோவாக நடித்த டி.ஆர்.மகாலிங்கத்திற்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி ரூ. 30 லட்சம் வரை வசூலித்தது. கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக லாபத்தினைப் பெற்றுக் கொடுத்தது.

இதனையடுத்து ஏவிம்-ன் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்றால் அது பக்த பிரகலாதன் திரைப்படம். வியக்க வைக்கும் செட்டுகள், அரண்மனைக் காட்சிகள், போர்க் காட்சிகள் என அந்தக் காலத்திலேயே பிரம்மாண்டத்தினைக் காட்டியிருந்தார் ஏவி மெய்யப்ப செட்டியார்.

ஏவிஎம் நிறுவனத்தைப் போலவே எஸ்.எஸ்.வாசனும் ஜெமினி ஸ்டுடியோஸ் சார்பில் சந்திரலேகா என்னும் மாபெரும் சரித்திர சாதனைப் படத்தினைத் தயாரித்து வசூல் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏவிஎம்-ன் நாம் இருவர், சபாபதி, வாழ்க்கை, ஓர் இரவு போன்ற திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews