தமிழ் சினிமாவில் இளமை இதோ பாடல் மட்டும்தான் புத்தாண்டு பாடலா.

இளையராஜா இசையில் சகல கலா வல்லவனில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடல்தான் புத்தாண்டு பாடல் என நினைத்துக்கொள்கிறார்கள்.

இளையராஜாவும் கூட நேற்று அந்த பாடலை மகிழ்ச்சியாக பாடிக்காட்டியது நினைவிருக்கலாம்.

ஆனால் அதையும் தாண்டிய பிரமாதமான பாடல்களை இளையராஜா புத்தாண்டுக்காக இசைத்துள்ளார். வரும் காலங்களில் நீங்கள் அந்த பாடல்களையும் கேட்டு வாருங்கள்.

சங்கிலி படத்தில் இடம்பெற்ற நல்லோர்கள் நம்மை காக்க என்ற பாடல் வரும் அதுவும் புத்தாண்டு பாடலே பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி

ஜனவரி 1 என்ற படத்தில் புத்தாண்டு பூத்தது இன்று என்ற பாடல் வரும் அந்த பாடலை பெரும்பான்மையானவர்கள் கேட்டிருப்பார்கள் அல்லது 80ஸ் கிட்ஸ் மறந்திருப்பார்கள்.இளையராஜாவின் இசையில் ஜானகி அழகாக இந்த பாடலை பாடியிருப்பார்.

அது போல அந்தகாலத்தில் ஏசி திருலோகச்சந்தர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட படம் அதே கண்கள் திகில் திரைப்படமான இந்த படத்தில் வரும் ஒரு புத்தாண்டு டான்ஸ் மிக மிக கலக்கலாக இடம்பெற்றது அந்த காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இது போல திருப்பம் என்ற படத்தில் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பாடலும் புகழ்பெற்ற பாடலாகும்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிற்பி இசையில் வெளிவந்த ஹேப்பி நியு இயர் என்ற பாடலும் புத்தாண்டு பாடல்களில் புகழ்பெற்ற பாடலாகும்.

பிரபு நடித்த வெற்றிக்கரங்கள் படத்தில் இடம்பெற்ற நள்ளிரவு மெல்ல மெல்ல பாடலும் இளையராஜா இசையில் புகழ்பெற்ற புத்தாண்டு பாடலாகும்.

வரும் காலங்களில் இந்த பாடல்களையும் கேட்டு பாருங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment