கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய கவிஞர் காமகோடியன் உடல்நலக்குறைவால் மரணம்

தமிழ் சினிமாவின் பிரபல கவிஞர் காமகோடியன் . பல தெவிட்டாத தேன் மெட்டுக்களை இவர் எழுதியுள்ளார். அனைத்து தரப்பு இசையமைப்பாளர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார்.

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வந்த வாழ்க்கை சக்கரம் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதிய இவர், மரிக்கொழுந்து படத்தில் இடம்பெற்ற கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு, பாடலை எழுதியவர்.

இளையராஜாவின் இசையில் புண்ணியவதி படத்தில் இடம்பெற்ற ஒரு ஆலம்பூவ அத்திப்பூவு பார்த்ததுண்டா உள்ளிட்ட புகழ்பெற்ற பாடல்களை கவிஞர் காமகோடியன் எழுதியுள்ளார்.

இதில் 2002ம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த மெளனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே என்ற பாடல் மிக புகழ்பெற்றது.

வயது மூப்பு காரணமாகவும் உடல்நலக்குறைவு காரணமாகவும் அவதிப்பட்டு வந்த கவிஞர் காமகோடியன் இன்று காலமானார் அவருக்கு வயது 76

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment