திரையுலகின் முதல் பெண் ஜேம்ஸ்பாண்ட்.. விஜயலலிதாவின் திரையுலக பயணம்..!

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் என்றால் உடனே ஜெய்சங்கரை தான் ரசிகர்கள் கூறுவார்கள். அந்த வகையில் ஜெய்சங்கர் உடன் பல துப்பறியும் படங்களில் நடித்த விஜயலலிதா தமிழ் சினிமாவின் லேடி ஜேம்ஸ்பாண்ட் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்தார்கள்.

நடிகை விஜயலலிதா ஆந்திராவைச் சேர்ந்தவர். 1949 ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது பெற்றோர் சென்னைக்கு குடிவந்தனார். சென்னையில் தான் விஜயலலிதா படித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் 15 வயதில் அவரது பக்கத்தில் வீட்டில் இருந்த லால் என்ற இயக்குனர் பீம ஆஞ்சநேய யுத்தம் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்த படத்தில் ரம்பா கேரக்டரில் நடிக்க வேண்டிய நடிகை திடீரென நடிக்க மறுத்துவிட்டர்.

காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா திரைப்படம் இயக்கியுள்ளாரா? அதுவும் அஜித் படமா?

அப்போதுதான் அவர் விஜயலலிதாவை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க அவரது பெற்றோரிடம் அனுமதி கேட்டார். 15 வயதில் எப்படி நடிக்க அனுப்புவது, அவரது பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம் என்று பெற்றோர்கள் தயங்கினார். அப்போது இயக்குனர் லால் தன்னுடைய மகள் போல் அவரை பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர் நடிக்க ஒப்புக்கொண்டனர்.

பீம ஆஞ்சநேய யுத்தம் திரைப்படத்தில் ரம்பா கேரக்டரில் மிக அருமையாக விஜயலலிதா நடித்தார். இந்த படம் கடந்த 1966 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் அவருக்கு தொடர்ந்து தெலுங்கில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

அப்போது தமிழிலும் சில படங்களில் அவர் நடிக்க தொடங்கினார். குறிப்பாக ஜெய்சங்கர் நடித்த காதல் படுத்தும் பாடு என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் ஜெய்சங்கரின் தங்கையாக அறிமுகமான நிலையில் மீண்டும் ஜெய்சங்கருடன் வல்லவன் ஒருவன் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பாடலில் அவர் அபாரமாக நடனம் ஆடி இருப்பார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

images 44

முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!

இதனை அடுத்து ஜெய்சங்கர் நடித்த பல துப்பறியும் திரைப்படங்களில் விஜயலலிதாவும் நடித்ததால் அவருக்கு தமிழ் சினிமாவின் லேடி ஜேம்ஸ் பாண்ட் என்ற பட்டம் கிடைத்தது. தமிழை போலவே அவர் தெலுங்கிலும் சில துப்பறியும் படங்கள் நடித்தார். அதன் பிறகு விஜயலலிதா நீலகிரி எக்ஸ்பிரஸ், காதல் வாகனம், அஞ்சல் பெட்டி 520, சாந்தி நிலையம், திருடன், சொர்க்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சொர்க்கம் திரைப்படத்தில் பொன்மகள் வந்தாள் என்ற பாடலுக்கு நடனமாடியவர் இவர்தான்.

அதேபோல் ஜெமினி கணேசன் நடித்த தேன்கிண்ணம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து நூற்றுக்கு நூறு, நான்கு சுவர்கள், கண்ணன் வருவான், நல்லதோர் குடும்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்த நிலையில்தான் ஆபாவாணனின் செந்தூரப்பூவே என்ற படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்த நிலையில் வில்லியாக விஜயலலிதா நடித்தார். அதன் பிறகு ரஜினியின் அதிசய பிறவி, பாண்டியன், உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

நடிகை விஜயலலிதா சிவப்பிரசாத் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரே மகன் உள்ளார். நடிகை விஜயலலிதாவின் அக்காள் மகள் தான் நடிகை விஜயசாந்தி. அவர் பல அதிரடி ஆக்சன் படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

நடிகர் அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா கேட்ட அந்த ஒரு கேள்வி! கடைசியில் என்ன நடந்தது?

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என விஜயலலிதா சுமார் 850 படங்கள் நடித்துள்ளார். இன்றும் கூட தமிழ் திரையுலகின் லேடி ஜேம்ஸ் பாண்ட் என்றால் அனைவருக்கும் விஜயலலிதா ஞாபகம் வருவார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...