சினிமாவை கலக்கிய முப்பெரும் பாட்டிகள்

கொல்லங்குடி கருப்பாயி

இவர் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி எனும் ஊரைச்சேர்ந்தவர்.நாட்டுப்புற பாடல்களில்
கைதேர்ந்தவர்.நன்றாக நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவர்.இவ்வளவு திறமையுள்ள ஒரு நடிகையை பாண்டியராஜனைத்தவிர எந்த இயக்குனரும் கண்டுகொண்டதாய் தெரியவில்லை.

0bb6c0298282317d25504409ab11f5dd

இவர் இயக்கிய ஆண்பாவம் படத்தில் பாட்டிக்கு நல்லதொரு நகைச்சுவை கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார்.தொடர்ந்து இவரின் ஏட்டிக்கு போட்டி,கோபாலா கோபாலா உட்பட பாண்டியராஜனின் பல படங்களில் நடித்து நடிப்புக்கு பெருமைசேர்த்தவர் இவ்வளவு புகழ்பெற்ற நாட்டுப்புற கலைஞர் திரையுலகத்தினராலும் பலராலும் புறக்கணிக்கப்பட்டு இவரது சொந்த கிராமமான கொல்லங்குடியிலேயே வசித்து வருகிறார். இவர் மிகவும் வறுமையில் வாடுவது குறிப்பிடத்தக்கது.

பறவை முனியம்மா

இவர் ஆரம்ப காலங்களில் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் கச்சேரிசெய்தவர் இவர் கோவில் திருவிழாக்களில் பாடிய பல பாடல்களை பல நண்பர்கள் குறிப்பாக தென்னகத்தை சேர்ந்தவர்கள் பார்த்திருப்பார்கள்.

2003ம் ஆண்டு வந்த தரணி இயக்கிய தூள் படத்தின் மூலம் இவர் சினிமாவுக்கு வந்தார் படம் முழுக்க இவர் இருந்தாலும்.க்ளைமாக்ஸில் இவர் பாடிய சிங்கம் போல நடந்து வரான் செல்லபேராண்டி என்ற பாடலே படத்திற்க்கு மிக மிக வலு சேர்த்தது.அந்த பாடலில் விக்ரமின் ஆக் ஷன் காட்சிகளும் சேர்ந்து படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன‌
தொடர்ந்து விவேக் நடித்த காதல் சடுகுடு,சரத்குமார் நடித்த ஏய் உட்பட பல படங்களில் நடித்து

வெற்றிகரமான சினிமா பாட்டியாக வலம் வந்தவர்.இவரின் சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள பறவை எனும் கிராமமாகும்.

தேனி குஞ்சரம்மா

இவர் தேனியை சேர்ந்தவர் பாரதிராஜாவின் பல படங்களில் பார்த்திருக்கலாம் சமீபத்தில் மறைந்துவிட்டார்.சிறந்த நாட்டுப்புற பாடகி ரஹ்மான் இசையமைத்த கொக்கு சைவ கொக்கு

என்ற பாடலையும் காதலன் படத்தின் சைதாப்பேட்டை ராணிப்பேட்டை பாடலையும் பாடியுள்ளார்.குறிப்பாக கருத்தம்மா படத்தில் கள்ளிப்பால் கொடுக்கும் கிழவியாக வந்து அனைவரையும் கவர்ந்தார்.

விசில் படத்தில் விவேக்கின் பாட்டியாக பாயாசம் கொடுக்கும் பாட்டியாக காமெடி வேடத்தில் நடித்திருந்தார். சில வருடங்கள் முன் மறைந்து விட்டார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews