100 படங்கள்.. 500 நாடகங்களில் தடம் பதித்த நடிகர்.. தமிழ் சினிமா மறைஞ்சாலும் இவர் புகழ் நிலைச்சு நிற்கும்!

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 500க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம்ஆர்கே என்று கூறப்படும் எம் ஆர் கிருஷ்ணகுமார் அவர்களின் திரையுலக வாழ்க்கையை தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

கடந்த 1940 ஆம் ஆண்டு சென்னை பிறந்த எம்ஆர்கே சிறுவயதிலேயே நாடகங்கள் நடிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் வி கோபாலகிருஷ்ணன் மற்றும் செந்தாமரை நாடக குழுவில் இணைந்து ஏராளமான நாடகங்களில் முக்கிய கேரக்டர்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இதனை அடுத்து அவர் மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான ’ஒரு ஓடை நதியாகிறது’ என்ற படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு தான் ஒரு கட்டத்தில் அவர் நடிகராக மாறி உள்ளார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விக்ரம் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் எம்ஆர்கே. முதல் முறையாக அவர் கடந்த 1969 ஆம் ஆண்டு காவல் தெய்வம் என்ற திரைப்படத்தில் நடிகராக நடித்தார். அதன் பிறகு ரஜினிகாந்த நடித்த தர்மத்தின் தலைவன், அதிசய பிறவி, சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், விக்ரமன் இயக்கத்தில் உருவான புது வசந்தம், பார்த்திபன் நடித்த பொண்டாட்டி தேவை உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

mrk1

கடந்த 1980 கள் மற்றும் 90களில் அவர் ஏராளமான படங்களில் நடித்தார். அதே போல, கமல்ஹாசனுடன் ’மகராசன்’ என்ற படத்திலும், விக்ரமுடன் தில் என்ற படத்திலும் நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் அவர் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் அவர் வில்லத்தனமான வேடங்களில் நடித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு பரத் நடித்த சேவல் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு, அவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அவர் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லுவேட்டி மைனர் என்ற படத்தில் அவர் நடித்த பரமசிவன், பொண்டாட்டி தேவை படத்தில் நடித்த நாயுடு, சேவகன் படத்தில் நடித்த ஆறுமுகம் உள்ளிட்ட கேரக்டர்கள் அவருக்கு மிகப் பெரிய புகழை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. ஷாம் அறிமுகமான 12பி என்ற படத்தில் ஷாமின் மாமாவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர் மற்றும் நாடகத்துறையில் பல ஆண்டுகளாக ஜொலித்த எம்ஆர்கே, திரையுலகம் இருக்கும் வரை ரசிகர்களை மனதில் இருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.