தமிழை பயிற்று மொழியாக்க, கட்டாய பாடமாக்க மாற்ற முடியாது!: மத்தியஅரசு;

தற்போது நம் நாட்டில் மொழிப் பிரச்சனை அதிகமாக நிலவுகிறது. குறிப்பாக இந்தி திணிப்பு தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசும் கூட, தான் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தமிழுக்கு எதிராக வாதம் புரிந்துள்ளது.

ஐகோர்ட் மதுரை

அதன்படி மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.இந்த கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனங்களில் தமிழ் மொழியை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கேந்திரிய வித்யாலயா

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழை கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் கோரிய வழக்கில் ஹைகோர்ட் கிளையில் மத்திய அரசு இவ்வாறு வாதம் புரிந்துள்ளது.

ஊழியர் பணியிட மாறுதல் ஆகும்போது குழந்தைகள் கல்வி பாதிக்காமல் இருக்க வேண்டிய கேந்திரிய  வித்யாலயா நடத்தப்படுகிறது என்றும் மத்திய அரசு ஹைகோர்ட் கிளையில் கூறியது. கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது  உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment