பட்டியல் இதோ; தமிழ் பேராய விருதுகள்-அறிவித்தார் எம்பி!!

தமிழகத்திலேயே மிகவும் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலில் எஸ்ஆர்எம் கல்லூரி காணப்படுகிறது. இதற்கு பல்கலை வேந்தராக பெரம்பலூர் மாவட்ட எம்பி பாரிவேந்தர் உள்ளார். இந்த எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய மாணவர்களுக்கு என்று குறிப்பிட்ட சில இட ஒதுக்கீடுகளும் அறிவிக்கப்படும். இவ்வாறு உள்ள நிலையில் எம்.பி பாரிவேந்தர் தமிழ் பேராய விருதுகள் பெருபோரை அறிவித்துள்ளார்.

அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் பேராய விருதுகளை அறிவித்தார் எம்பி பாரிவேந்தர் புதுமைப்பித்தன் படைப்பியலுக்கு விருது வடசென்னை நிவேதிதா லூயிஸ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் கவிதை விருது மவுனன் யாத்திரிகாவுக்கு அறிவிக்கப்பட்டது. அழ வள்ளியப்பா குழந்தை விழுது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் விழியன் ஆகியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது சித்தார்த்தனுக்கு வழங்கப்பட உள்ளதாக எம்பி பாவேந்தர் அறிவித்துள்ளார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது கருவூர் கண்ணன் குடந்தை பாலு ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கலைஞர் தமிழ் ஹரி ஆய்வு அறிஞர் விருது பேராசிரியர் ராமகுருநாதன், சுதேசி மித்ரன் தமிழ் இதழ் விருது ஹரி கிருஷ்ணருக்கும் அறிவிக்கப்பட்டது.

தொல்காப்பியர் தமிழ் சங்க விருது புதுவை தமிழ் சங்க தலைவர் முத்துவுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் பாரிவேந்தர். பைந்தமிழ் விருது பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment