கேப்டன் விஜயகாந்தை ஒதுக்கிய நடிகைகள்.. அவமானங்களை உரமாக்கிய கேப்டனின் அந்த நல்ல மனசு..

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார் ஆகியோர் முன்னனியில் இருந்த காலகட்டம் அது. இவர்கள் மூவருக்கும் மாற்றாக கருப்பு தேகத்துடன் களையான முகத்துடன் மதுரையிலிருந்து கிளம்பி வந்தவர்தான் கேப்டன் விஜயகாந்த். பலகட்ட வாய்ப்புகள் தேடலுக்குப்பின் முதன் முதலாக சுதாகர் ஹீரோவாக நடித்த இனிக்கும் இளமை படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்தினைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் அப்போதைய கதாநாயகிகள் விஜயகாந்தை ஒதுக்கியுள்ளனர். ஏனெனில் அவரின் உருவம். மனதைப் பார்க்காமல், திறமையைப் பார்க்காமல் அவரின் உருவத்தைப் பார்த்து எடைபோட்ட சிலர் கதாநாயகிகளை விஜயகாந்துடன் நடித்தால் மார்க்கெட் போய்விடும் என பயமுறுத்திய காரணத்தினால் அவருடன் நாயகியாக நடிக்க மறுத்துள்ளனர்.

அகல் விளக்கு படத்தில் அவருக்கு நடிக்க சான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்தப் பட ஷுட்டிங்கில் நிறைய அவமானங்களைச் சந்தித்துள்ளார் கேப்டன். ஏனெனில் அகல் விளக்கு ஹீரோயின் ஷோபா அப்போது பிஸியான நடிகை. ஒருமுறை படப்பிடிப்பு நடந்த சமயத்தில் மதிய உணவு இடைவேளை வரை ஷோபா வரவில்லை.

அப்போது தான் விஜயகாந்த் சாப்பிட அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஷோபா வரவே பட யூனிட் ஷோபா வந்துவிட்டார் என்று விஜயகாந்தினை பாதியிலேயே எழுந்து வரச் சொல்லியிருக்கின்றனர். அந்த நிமிடத்தில் விஜயகாந்த் கலங்கிவிட்டாராம்.

கலக்கிய கவுண்டமணி, செந்தில்.. கைகொடுத்த பிரபு.. ரூட்டை மாற்றி ஜெயித்த விவேக்..

இதேபோல் பார்வையின் மறுபக்கம் என்ற படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். விஜயகாந்துக்கு ஜோடி ஸ்ரீபிரியா. ஊட்டியில் படப்பிடிப்பிற்காக ஸ்ரீபிரியா வரவுக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில் கடைசி நேரத்தில் வந்த தகவல் அவர் விஜகாந்துடன் நடிக்க உடன்படவில்லை என்பது.

இதேபோல்தான் சரிதாவும் ஒதுக்கியுள்ளார். ஆனால் சரிதாவிடம் விஜயகாந்த் தான் நடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்கள். இதனை அறிந்த கேப்டன் நேராக சரிதாவின் வீட்டிற்குச் சென்று உண்மையை விளக்கியுள்ளார். மேலும் கலைஞர்களுக்குள் உட்பூசல் இருக்கக் கூடாது என்று கூறி யார் கூறுவதையும் நம்ப வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார் கேப்டன்.

இதற்கு அடுத்ததாக ராதிகா. அவரும் விஜயகாந்துடன் நடிப்பதை விரும்பவில்லை. காரணம் விஜயகாந்துடன் நடித்தால் மார்க்கெட் போய்விடும் என்று யாரோ கூற அவர்களும் அதை அப்படியே நம்பியிருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்திற்குப் ராதிகா விஜயகாந்துடன் பல படங்களில் இணைந்து நடித்தார்.

இப்படி கேப்டன் விஜயகாந்தின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை கசப்பானதாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த அவமானங்களை அனைத்தையும் திரும்பவும் பழிவாங்குவதற்கு பயன்படுத்தாமல் அனைவரையும் அனுசரித்து மனதில் நல்ல எண்ணங்களையே விதைத்துச் சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...