விஜய் – அஜித் ரசிகர்களை ஆட்டத்தால் தன் பக்கம் இழுக்கும் தமன்னா ! வைரல் வீடியோ !

சினிமா திரையுலகை பொறுத்த வரையில் தமிழ், தெலுங்கு,இந்தி, கன்னடம் போன்ற மொழிகள் மட்டுமல்லாது பாலிவுட், கோலிவுட்டில் கலக்கி வருபவர் தமன்னா. கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை தமன்னா. கல்லூரி திரைப்படம் தான் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதை தொடர்ந்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் அஜித்,விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம்வருகிறார்.2015 ஆம் ஆண்டு ராஜமவுளி இயக்கத்தில் பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்ததில் உலகமெங்கும் பிரபலமடைந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியானது F3 எனும் திரைப்படம்.

Tamannaah

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா தற்போழுது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள தமன்னாவின் பப்ளி பவுன்சர் படத்திலிருந்து பித்து பிடிச்சி எனும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சௌரவ் சுக்லா, அபிஷேக் பஜாஜ், ஷகீல் வைத் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ரன்னிங் டைம் கண்டு மிரளாமல் களமிறங்கும் வெந்து தணிந்தது காடு ! சென்சார் குறித்து மாஸ் அப்டேட்!

தற்போது படத்தின் பித்து பிடிச்சி எனும் விடியோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment