விஜய் உள்பட பல பிரபலங்கள் நடித்த நடிகை ஜெனிலியாவின் கணவருடன் தமன்னா இணைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தமன்னா என்பதும் தற்போது அவருக்கு இந்தி மற்றும் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது புதிய வெப்தொடர் ஒன்றில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் ஜெனிலியாவின் கணவரும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் நாயகனாக நடிக்க உள்ளார். முதல்முறையாக ரித்தேஷ் மற்றும் தமன்னா இனைய இருக்கும் இந்த வெப்தொடர் குடும்ப கதை என்றும் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின் ஏற்படும் உணர்ச்சிமயமான கதையம்சம் என்றும் கூறப்படுகிறது.
இந்த வெப்தொடர் தமிழ் தெலுங்கு உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாக்க உள்ளதாகவும் நெட்பிளிக்ஸ் இந்த தொடரை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடரின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது என்பதும் இந்த படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.