சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை தமன்னா தற்போது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர் ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சாதாரண வகை உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் உள்ளன
இதுகுறித்து அவர் கூறிய போது ’நீங்கள் உச்சபட்ச பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என்றும், இரண்டு மாதம் சாதாரண உடற்பயிற்சி மேற்கொண்டால் போதும் பழைய ஆரோக்கியத்தை திரும்பப் பெறலாம், ஆனால் தொடர்ந்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் அப்படி செய்தால் என்னைப்போல் பழைய நிலைக்கு திரும்பலாம் என்று அவர் கூறியுள்ளார்
தமன்னாவின் இந்த அட்வைஸ் கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது தமன்னா தெலுங்கு படம் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது