Connect with us

ரஜினியின் ஜெயிலர் படத்தில் சில நிமிடங்களே வரும் தமன்னா! ஆர்வத்தில் ரசிகர்கள் !

rajini jail

பொழுதுபோக்கு

ரஜினியின் ஜெயிலர் படத்தில் சில நிமிடங்களே வரும் தமன்னா! ஆர்வத்தில் ரசிகர்கள் !

ரஜினிகாந் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போழுது சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க,இந்த படத்தில் ரஜினி முதன்மை ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.இந்த படத்தில் பிரியங்கா அருள் ரஜினிக்கு மகளா நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

rajinikanth 2 1 2rajinikanth 2 1 2

 

படத்தில் இளம் ஹீரோ வசந்த் ரவி ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கயுள்ளார், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக இவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.மேலும் ஆகஸ்ட் 22ஆம் ரஜினி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்தது.

சமீபத்தில் ‘22.8.22 – 11:00 AM #Jailer’ என்ற கேப்ஷனுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளது. அந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படம் உள்ளது.இந்த போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சினிமாவை தவிர தற்காப்பிலும் ஆர்வம் காட்டும் சமந்தா! அப்படி என்ன கத்துக்குறாங்க ?

tamannah1182022m

அதையடுத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தமன்னாவின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் ரஜினிக்கு ஜோடிதான் என்றாலும் முழு படத்திலும் ஜோடியாக கூடவே இல்லாமல், சில காட்சிகளில் மட்டுமே நடிக்கும் ஒரு சிறிய வேடத்தில்தான் தமன்னா நடிக்கிறாராம். சில நிமிடம் வந்தாலும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது மாஸ் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top